/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உத்தரகோசமங்கையில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் உத்தரகோசமங்கையில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
உத்தரகோசமங்கையில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
உத்தரகோசமங்கையில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
உத்தரகோசமங்கையில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
ADDED : ஜூலை 10, 2024 05:24 AM

உத்தரகோசமங்கை,; -உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உவர் நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ., பிளான்ட் 2017ல் அமைக்கப்பட்டது.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.8.50 லட்சத்தில் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகி தாகம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் ஓராண்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
அதன் பிறகு 2018 முதல் தற்போது வரை பயன்பாடின்றி காட்சி பொருளாக முடங்கியது. ரூ.8.50 லட்சம் மதிப்பிலான உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்குரிய எலக்ட்ரிக் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகிறது. பக்தர்கள் கூறியதாவது:
மங்களேஸ்வரி அம்மன் சன்னதி அருகே அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ., பிளான்டால் எவ்வித பயன்பாடும் இல்லை. திருப்புல்லாணி ஒன்றியத்தால் வழங்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி முடங்கியுள்ள உவர் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.