/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விபத்தை தடுக்க ராமேஸ்வரம் அருகே உருக்குலைந்த வாகனத்தில் விழிப்புணர்வு விபத்தை தடுக்க ராமேஸ்வரம் அருகே உருக்குலைந்த வாகனத்தில் விழிப்புணர்வு
விபத்தை தடுக்க ராமேஸ்வரம் அருகே உருக்குலைந்த வாகனத்தில் விழிப்புணர்வு
விபத்தை தடுக்க ராமேஸ்வரம் அருகே உருக்குலைந்த வாகனத்தில் விழிப்புணர்வு
விபத்தை தடுக்க ராமேஸ்வரம் அருகே உருக்குலைந்த வாகனத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 07, 2024 05:06 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பலர் பலியாகினர். இதனை தடுக்க நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டின் நடுவே சென்டர் மீடியன் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் மண்டபத்தில் ரோட்டோரத்தில்இரும்பு துாண்கள் அமைத்து இதன் மீது ஏற்கனவே விபத்தில் சிக்கி உருக்குலைந்த ஒரு காரை வைத்துள்ளனர். இந்த காரை இந்த ரோட்டின் வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்து எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்திற்குள்ளான வாகனத்தை வைத்துள்ளோம்.
இதே போல் ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.