ADDED : ஜூன் 07, 2024 05:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ சர்ச் வளாகத்தில் தமிழக்கு பெருமை சேர்த்த எல்லிஸ் துரை கல்லறை புதுப்பித்து மரியாதை செலுத்தும் விழா நடந்தது.
மதுரை-ராமநாதபுரம் திருமண்டலம் பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தார். பாதிரியார்கள் ரூஸ்வெல்ட், ஆர்.வி.சிங், ஞான ஆனந்தராஜ், ராமநாதபுரம் திருச்சபை பொருளாளர் ரூபன், செயலாளர் நெல்சன், சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் பிரேம் கிறிஸ்துதாஸ் மற்றும் ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.