/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை பகுதியில் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம் திருவாடானை பகுதியில் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம்
திருவாடானை பகுதியில் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம்
திருவாடானை பகுதியில் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம்
திருவாடானை பகுதியில் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம்
ADDED : ஜூன் 21, 2024 04:08 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கையால் வி.ஏ.ஓ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3000 லஞ்சம் வாங்கிய புல்லுார் வி.ஏ.ஓ., சதீஷ் கைது செய்யப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவரை வழக்கிலிருந்து ஜாமினில் விடுவிப்பதற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஜூன் 18 ல் பட்டா மாறுதலுக்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓரியூர் வி.ஏ.ஓ., மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோரை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
வி.ஏ.ஓ.,க்கள் அடிக்கடி சிக்குவதால் அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த உஷார் நடவடிக்கையால் மக்களும், சமூக ஆர்வலர்களும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அலைபேசியிலோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு, 9498215697, 9498652169, இன்ஸ்பெக்டர்களுக்கு 9498652166, 94981 88390, 94986 52167, 96000 82798 என்ற அலைபேசி எண்களிலும், 04567-230036 என்ற அலுவலக தொலைபேசியிலும் புகார் செய்யலாம்.
புகார் அளிப்பவர்களின் விபரம் 100 சதவீதம் ரகசியம் காக்கப்படும் என்றனர்.