ADDED : ஜூன் 21, 2024 04:10 AM

திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே பொக்கனா ரேந்தலில் உள்ள பூரண புஷ்கலா தேவி சமேத மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயிலில் ஆனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது.
மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோழி, சேவல் பலியிடப்பட்டது.
ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.