/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சஸ்பெண்ட் லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 22, 2024 02:18 AM
திருவாடானை:பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரத்தை சேர்ந்தவர் டெய்லர் நாகராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாறுதல் செய்ய ஓரியூர் வி.ஏ.ஓ., மாதவனை 35, அணுகினார்.
மாதவன் கிராம உதவியாளர் காளீஸ்வரனை 34, பார்க்குமாறு கூறினார். அதனை தொடர்ந்து பட்டா மாறுதல் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேசப்பட்டது.
இது குறித்து நாகராஜ் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை நாகராஜ் ஜூன் 18 ல் மாதவன், காளீஸ்வரனிடம் கொடுத்த போது இருவரையும் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் நேற்று வி.ஏ.ஓ., மாதவனையும், திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் கிராம உதவியாளர் காளீஸ்வரனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.