/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முதன் முதலாக இந்திய-இலங்கை எல்லையில் தேசியக்கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர் முதன் முதலாக இந்திய-இலங்கை எல்லையில் தேசியக்கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர்
முதன் முதலாக இந்திய-இலங்கை எல்லையில் தேசியக்கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர்
முதன் முதலாக இந்திய-இலங்கை எல்லையில் தேசியக்கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர்
முதன் முதலாக இந்திய-இலங்கை எல்லையில் தேசியக்கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர்
ADDED : ஜூன் 22, 2024 02:17 AM

ராமேஸ்வரம்:இந்திய வரலாற்றில் முதன் முதலாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் தனுஷ்கோடி அருகே இந்திய- இலங்கை கடல் எல்லையான 7ம் மணல் தீடையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார். பின் அங்கிருந்து இந்திய கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் கப்பலில் புறப்பட்டு இந்திய கடல் எல்லையை பார்வையிட்டார்.
அரிச்சல்முனையில் இருந்து 8 கி.மீ.,ல் இந்திய எல்லை முடிவடைகிறது. அங்குள்ள 7ம் மணல் தீடை இந்திய-இலங்கை எல்லையை பிரிக்கும் பகுதியாகும். இந்திய அரசியல் வரலாற்றில் இத்தீடையில் முதன் முதலாக நேற்று அமைச்சர் சஞ்சய் சேத் இறங்கினார்.
இங்கு கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்த தேசியக்கொடியை அமைச்சர் ஏற்றி வைத்து ராயல் சல்யூட் அடித்தார். பின் இந்தியா- இலங்கை கடல் பகுதியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
கடந்த 2013ல் இந்திய கடற்படையினர் இத்தீடையில் சிமென்ட் சிலாப்பில் இந்தியா என்ற பெயர் பலகை வைத்தனர்.
இது புயல், ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தது.
11 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் சஞ்சய் சேத் இங்கு தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
யோகா பயற்சியில் தமிழகம், புதுச்சேரி கடற்படை பிராந்திய அதிகாரி டிங்ரா, ராமநாதபுரம் அருகே உள்ள கடற்படை ஐ.என்.எஸ்., பருந்து நிலைய கமாண்டர் அர்ஜுன் மேனன், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி, அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.