/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்க வலியுறுத்தல் 2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்க வலியுறுத்தல்
2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்க வலியுறுத்தல்
2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்க வலியுறுத்தல்
2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2025 02:50 AM
ராமநாதபுரம்:கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2010ல் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஆட்சி மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலின் பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பள்ளிக்கல்வித்துறையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய சான்றிதழ்சரிபார்ப்பு 2010 மே மாதம் மூன்று கட்டங்களாக நடந்தது. 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 5000 பேர் காத்திருந்தனர்
2011ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நியமன பணிகள் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். 2012ல் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டு 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பணி நியமனம் கிடைக்காத 5000 பேர் 12 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் டிஷ்கோஜா கூறுகையில், ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மூலம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் அரசு செயல்படுத்தவில்லை. தற்போதைய நிலையில் காத்திருப்போரின் சராசரி வயது 50 ஆக உள்ளது. சில ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும்.
எனவே தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவு வழங்கி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட எங்களை நியமிக்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.