/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மிளகாயை காயவைக்க நவீன சோலார் உலர்களம் அமைப்பு மிளகாயை காயவைக்க நவீன சோலார் உலர்களம் அமைப்பு
மிளகாயை காயவைக்க நவீன சோலார் உலர்களம் அமைப்பு
மிளகாயை காயவைக்க நவீன சோலார் உலர்களம் அமைப்பு
மிளகாயை காயவைக்க நவீன சோலார் உலர்களம் அமைப்பு
ADDED : மார் 13, 2025 02:40 AM

ராமநாதபுரம்:மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில்ராமநாதபுரம் மாவட்டம் மாலங்குடி கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்மிளகாயை உலர்த்தும் வகையில் சூரிய சக்தியால்இயக்கப்படும் (சோலார் டிரையர்) உலர்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை,மாலங்குடி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, சிக்கல்,ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி ஆகிய இடங்களில் குண்டு மிளகாய்சாகுபடி நடக்கிறது. நிறம், தனித்துவ காரத்தன்மை காரணமாகபுவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
வெளி மாநிலம், மாவட்டங்களுக்குகொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மிளகாய்விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைவிரிவாக்க கல்வி மையம், ராமநாதபுரம் வேளாண் அறிவியல்நிலையம் சார்பில் மாலங்குடி கிராமத்தில் முற்றிலும்சூரியசக்தியால் இயக்கப்படும் உலர்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் கூறுகையில், மாலங்குடிகிராம விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் காலநிலைமாற்றத்திற்கு ஏற்ற தொழில்நுட்பம் திட்டத்தில் இலவசமாக ரூ.5 லட்சத்தில்சோலார் டிரையர் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியே 10 நாட்கள் ஆகும். இதில் 3 நாட்களில் 500 கிலோ வரை உலர்த்தி விடலாம். கல், மண், குப்பை தொந்தரவு இருக்காது. இதனை அப்பகுதி விவசாயிகள் குழுவாக இணைந்து பராமரித்துக்கொள்ள வேண்டும் என்றார்.