/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அமைப்பு சாரா தொழிலாளர் ஜூலை 16ல் போராட்டம் அமைப்பு சாரா தொழிலாளர் ஜூலை 16ல் போராட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஜூலை 16ல் போராட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஜூலை 16ல் போராட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஜூலை 16ல் போராட்டம்
ADDED : ஜூலை 12, 2024 10:02 PM
ராமநாதபுரம்:அமைப்பு சாரா தொழிலாளர்களின் 70 லட்சம் பதிவுகள் காணாமல் போனதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 70 லட்சம் தொழிலாளர்களின் பதிவை காணவில்லை. இதை கண்டித்தும், 60 வயது ஆண், 55 வயது பெண் தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம், பண்டிகை கால சிறப்புத்தொகை 5000 ரூபாய் வழங்க வேண்டும்.
கல்வி, திருமணம், ஓய்வூதியம், இறப்பு நிதி கோரி விண்ணப்பித்தால் அற்ப காரணங்களுக்காக அலைகழிப்பு செய்வதை கண்டிப்பது. ஆன்லைனில் அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகங்கள் முன் ஜூலை 16ல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.