ADDED : ஜூலை 12, 2024 08:35 PM
ராமேஸ்வரம்:மீன்பிடி தடை காலத்திற்கு பின் ராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய இறால், நண்டு, கனவாய், காரல், சங்காயம் உள்ளிட்ட பல வகை மீன்களுக்கு வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்தனர். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் நியாயமான நிலை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 6 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனால், 500க்கு மேற்பட்ட பெரிய படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் வியாபாரிகளிடம் மீனவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் மீனுக்கு உரிய விலை வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளோம் என மீனவர் சங்கத் தலைவர் சகாயம் தெரிவித்தார்.