/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது 630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 01:54 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை கைது செய்து 630 கிலோ அரிசி, சரக்கு வாகனத்தை உணவு கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மோகன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., குமாரசாமி, ஏட்டு தேவேந்திரன் ராமநாதபுரம் வசந்த நகரில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் 37, குகன் 20, ஆகியோரை கைது செய்தனர்.
கடத்தப்பட்ட 18 மூடைகளில் இருந்த 630 கிலோ அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.