/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல் சாயல்குடி வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
சாயல்குடி வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
சாயல்குடி வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
சாயல்குடி வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 03, 2024 03:03 AM

சாயல்குடி: சாயல்குடியில் வாரச்சந்தை நாட்களில் ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சாயல்குடியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது.
இதற்காக கடந்த 2020-- 2021 ஆம் நிதியாண்டில் ரூ.1கோடியே 91 லட்சத்தில் 150 சிறு கடைகள் தரைக்கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி வியாபாரிகள் வாரச்சந்தை வளாகத்திற்கு வெளியே ரோட்டோரங்களில் கடைகளை விரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் அருகே சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சை பெறுவதற்காக வரக்கூடிய நோயாளிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே சாலையோர கடைகளை முறைப்படுத்தவும், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.