/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் கனமழை ரோடுகளில் தேங்கிய கழிவுநீர் பரமக்குடியில் கனமழை ரோடுகளில் தேங்கிய கழிவுநீர்
பரமக்குடியில் கனமழை ரோடுகளில் தேங்கிய கழிவுநீர்
பரமக்குடியில் கனமழை ரோடுகளில் தேங்கிய கழிவுநீர்
பரமக்குடியில் கனமழை ரோடுகளில் தேங்கிய கழிவுநீர்
ADDED : ஜூன் 03, 2024 03:02 AM

பரமக்குடி: -பரமக்குடியில் ஒரு மணி நேரம் வரை கொட்டிய கன மழையால் ரோடுகளில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்றது. துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்பட்டனர்.
பரமக்குடியில் அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த வாரங்களில் மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மீண்டும் அனலில் மக்கள் தவித்தனர்.
நேற்று மதியம் 3:00 மணி முதல் ஒரு மணி நேரம் வரை கன மழை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த மழையால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.
தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காந்தி சிலை ரோடு சவுகதலி தெரு, உழவர் சந்தை பகுதி, ஆர்ச் அருகில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மழை நீர் கழிவுநீருடன் கலந்து நின்றது
வாறுகால்களில் அடைப்பால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியது. இதன் அருகில் உள்ள தாழ்வான வீடுகளில் தண்ணீர் புகுவதால் மக்கள் சிரமப்பட்டனர்.
ஒவ்வொரு முறை மழையின் போது இது போன்ற தேங்கும் நீர் வெளியேற வாறுகால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.