Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரியமான் கடற்கரையில் குவிந்த மக்கள்வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

அரியமான் கடற்கரையில் குவிந்த மக்கள்வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

அரியமான் கடற்கரையில் குவிந்த மக்கள்வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

அரியமான் கடற்கரையில் குவிந்த மக்கள்வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூன் 18, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே அரியமான் கடற்கரை திருவிழாவிற்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்ததால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் ஜூன் 15 முதல் 17 வரை கடற்கரை திருவிழா நடந்தது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், படகுசவாரி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

கடற்கரை கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் நடந்தது. நேற்று விடுமுறை தினம் மற்றும் திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். பிரப்பன்வலசை முதல் அரியமான் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் ராமேஸ்வரம் ரோட்டில் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் பொதுமக்கள் காத்திருந்து சிரமப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us