/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடியிருப்பு வசதிகள் இல்லாமல் திருவாடானை போலீசார் அவதி குடியிருப்பு வசதிகள் இல்லாமல் திருவாடானை போலீசார் அவதி
குடியிருப்பு வசதிகள் இல்லாமல் திருவாடானை போலீசார் அவதி
குடியிருப்பு வசதிகள் இல்லாமல் திருவாடானை போலீசார் அவதி
குடியிருப்பு வசதிகள் இல்லாமல் திருவாடானை போலீசார் அவதி
ADDED : ஜூன் 25, 2024 11:04 PM
திருவாடானை : குடியிருப்பு வசதி இல்லாததால் திருவாடானை போலீசார் அவதிப்படுகின்றனர்.
திருவாடானையில் பணிபுரியும் போலீசாருக்கு தாலுகா அலுவலகம் அருகே குடியிருப்பு இருந்தது. மிகவும் சேதமடைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. ஆனால் புதிதாக குடியிருப்புகள் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சப்-டிவிஷனில் உள்ள தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் திருவாடானையில் மட்டும் குடியிருக்க வசதியில்லை.
தாலுகா தலைமையிடமான இங்குள்ள போலீஸ்ஸ்டேஷனில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். தற்போது புதிதாக ஆறு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் உள்ளனர். இவர்கள் தற்போது வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.
பெரும்பாலான போலீசார் சில மாதங்கள் மட்டும் பணியாற்றிவிட்டு குடியிருப்பு வசதியில்லாததால் வேறு ஊர்களுக்கு மாறுதல் வாங்கி சென்று விடுகின்றனர். ஆகவே குடியிருப்பு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.