/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல்
ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல்
ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல்
ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல்
ADDED : ஜூன் 25, 2024 11:04 PM
திருவாடானை : ரேஷன் அரிசி வாங்குவோர் மொத்தமாக சேமித்து வைத்து சில அரிசி ஆலைகளுக்கு விற்கின்றனர். திருவாடானை தாலுகாவில் 60 முழு நேர ரேஷன் கடைகளும், 25 பகுதி நேர ரேஷன்கடைகளும் உள்ளன. 39,400 கார்டுதாரர்கள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதந்தோறும் 20 முதல் 30 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் சிலர் தங்களுக்கு இலவசமாக கிடைக்கும் ரேஷன் அரிசியை வாங்கி வீடுகளில் வைக்கின்றனர். கள்ளசந்தையில் விற்போர் அவர்கள் வீடு தேடிச் சென்று கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், நடுத்தர மக்கள் ரேஷன் அரிசியை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதே நேரம் சிலர் அரிசியை சேமித்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர். இதே போல் பாமாயில், பருப்பும் விற்பனை செய்யபடுகிறது. இந்த முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.