/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வழுதுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம் திருட்டு வழுதுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம் திருட்டு
வழுதுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம் திருட்டு
வழுதுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம் திருட்டு
வழுதுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம் திருட்டு
ADDED : ஜூன் 16, 2024 04:37 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி நகரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வழுதுார் அருளொளி நகரில் வசிப்பவர் அங்குச்சாமி மகன் அருண்குமார் 34. இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியூர் சென்றிருந்தார். இவரது மனைவி ஹேமா தனது தாய் வீடான உடைச்சியார்வலசைக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் அதே பகுதியில் உள்ள அருண் பெரியப்பா செல்லம் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவையும் உடைத்து பொருட்களை திருடிச் சென்றனர்.
அடுத்தடுத்து வீடுகளில் நடந்த திருட்டு குறித்து கேணிக்கரை போலீசில் அருண்குமார் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் துறையினர் தடயங்களை பதிவு செய்தனர்.