சாயல்குடியில் வணிகர் சங்க கூட்டம்
சாயல்குடியில் வணிகர் சங்க கூட்டம்
சாயல்குடியில் வணிகர் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 04:36 AM
சாயல்குடி: சாயல்குடியில் வணிகர்சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சாயல்குடி வணிகர் சங்கத் தலைவர் விஷ்ணுகாந்த் தலைமை வகித்தார். வணிகர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.
வளர்ந்து வரும் நகரமாக உள்ள சாயல்குடியில் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பிரித்து சாயல்குடிக்கு அலுவலகத்தை கொண்டு வருவதற்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மே 5ல் வணிகர் உரிமை மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சாயல்குடியில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து பணிமனை அமைய வேண்டி பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதனை விரைவில்நிறைவேற்றித் தர வேண்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.