/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறல் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறல்
தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறல்
தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறல்
தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறல்
ADDED : ஜூன் 11, 2024 10:46 PM
திருவாடானை : தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சிநிர்வாகங்கள் திணறுவதால் இனப் பெருக்கம் அதிகரித்துள்ளது.
திருவாடானை, தொண்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் ரோட்டோர உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவுகள், தெருநாய்களுக்கு உணவாகிறது. மேலும் இறைச்சி கடைக்காரர்கள் ரோட்டோரம் இறைச்சிக்கழிவுகளை கொட்டிச்செல்வதும், தெருநாய் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் அவ்வப்போது தெருநாய்களின் கடிக்குஆளாகின்றனர்.
மக்கள் கூறுகையில், நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாமலும், கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறையாலும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.