ADDED : ஜூன் 11, 2024 08:35 PM

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் கொலை வழக்கில் இலந்தைகுளம் சேர்ந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர்.
கமுதி செட்டியார் தெரு கண்ணன் 51, கே.பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். ஜூன் 10ல் பள்ளிக்கு டூவீலரில் செல்லும் போது பாப்பாங்குளம் விலக்குரோட்டில் கண்ணணை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கே.வேப்பங்குளம் முத்துஅரியப்பனுக்கும், கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதனால் முத்துஅரியப்பன் தம்பி முருகன், முத்தலாங்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் கண்ணனை வெட்டி கொலை செய்ததும், கண்ணன் வாகனத்தில் வருவது குறித்து இலந்தைகுளத்தை சேர்ந்த பாலமுருகன் 22 தகவல் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் கைது செய்தார். முத்துஅரியப்பன், முருகன், வினோத்குமார் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.