Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

ADDED : ஜூன் 23, 2024 09:38 AM


Google News
பெரியபட்டினம், : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்எஸ்.டி.பி.ஐ., கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வந்திருந்தார். அவர் பேசியதாவது:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை உயர்த்திவழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் முதல் அனைவரையும் கைது செய்து கடுமையானதண்டனை வழங்க வேண்டும்.

அரசின் மெத்தன போக்கே இவ்வளவு உயிர் பலிக்கு காரணம். கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை போகும் அதிகாரிகள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக வலைதளங்களில் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜமீலு நிஷா, சோமு உட்பட பலர்பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us