/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் ரயில் துாக்கு பாலம் துாணில் பொருத்தப்பட்ட இரும்பு பிளேட் பாம்பன் ரயில் துாக்கு பாலம் துாணில் பொருத்தப்பட்ட இரும்பு பிளேட்
பாம்பன் ரயில் துாக்கு பாலம் துாணில் பொருத்தப்பட்ட இரும்பு பிளேட்
பாம்பன் ரயில் துாக்கு பாலம் துாணில் பொருத்தப்பட்ட இரும்பு பிளேட்
பாம்பன் ரயில் துாக்கு பாலம் துாணில் பொருத்தப்பட்ட இரும்பு பிளேட்
ADDED : ஜூன் 23, 2024 09:34 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலம் துாணில் இரும்பு பிளேட் பொருத்தப்பட்டன. இதன் மீது ராட்சத வீல்கள் பொருத்தும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2020 முதல் புதிய ரயில் துாக்கு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் 1.6 கி.மீ.,க்கு 100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 500 மீட்டரில் துாண்கள் மட்டும் அமைத்து இருந்தனர்.
இப்பகுதியில் பாலம் நடுவில் பொருத்த துாக்கு பாலம் வடிவமைக்கப்பட்டு கடந்த மார்ச் 13 முதல் நகர்த்தப்பட்டு தற்போது நடுப்பாலம் அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நடுவில் 700 டன் எடையுள்ள புதிய துாக்கு பாலத்தை பொருத்த கடலில் 20 இரும்பு துாண்களை ரயில்வே பொறியாளர்கள் பொருத்தினர். இதனையடுத்து நேற்று துாக்கு பாலம் அருகில் உள்ள இரும்பு துாண்களில் மேலே இரும்பு பிளேட்டை பொருத்தி இணைத்தனர்.
இந்த பிளேட் மீது இரு ராட்சத வீல்கள் பொருத்த பாம்பன் கரைக்கு இரு வீல்களை லாரியில் ஊழியர்கள் கொண்டு வந்தனர்.
துாக்கு பாலத்தை ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் லிப்ட் முறையில் துாக்க இந்த ராட்சத வீல்கள் உதவும். ஒரிரு நாட்களில் இரண்டு வீல்களும் பொருத்தப்படும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.