ADDED : ஜூலை 14, 2024 04:15 AM

கடலாடி, : கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சியில் உள்ள ஏந்தல் கிராமத்தில் கண்ணமுடையார் அய்யனார், பொன்னந்தி காளியம்மன், கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
யாகசாலை பூஜைக்கு பிறகு காலை 10:30 மணிக்கு கோபுரமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் குல தெய்வ குடிமக்கள் மற்றும் பூஜாரிகள், நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.