ADDED : ஜூன் 03, 2024 02:56 AM

கமுதி: கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் ராஜா லாட சன்னியாசி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுக்கு பின் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
ராஜா லாட சன்னியாசிக்கு பால், சந்தனம், மஞ்சள் அபிேஷகம் செய்து, பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி, அதனைச்சுற்றியுள்ள பக்தர்கள் பங்கேற்றனர்.