/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் 10 நாளில் பெயர்ந்த தார் ரோடு; மக்கள் கொந்தளிப்பு ராமேஸ்வரத்தில் 10 நாளில் பெயர்ந்த தார் ரோடு; மக்கள் கொந்தளிப்பு
ராமேஸ்வரத்தில் 10 நாளில் பெயர்ந்த தார் ரோடு; மக்கள் கொந்தளிப்பு
ராமேஸ்வரத்தில் 10 நாளில் பெயர்ந்த தார் ரோடு; மக்கள் கொந்தளிப்பு
ராமேஸ்வரத்தில் 10 நாளில் பெயர்ந்த தார் ரோடு; மக்கள் கொந்தளிப்பு
ADDED : ஜூலை 25, 2024 11:51 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோடு 10 நாளில் பெயர்ந்து சேதமடைந்ததால் ரூ.27 லட்சம் வீணாகியது. தரமான ரோடு அமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் நகராட்சி ஜல்லிமலை, பாரதி நகர் பகுதியில் உள்ள தார் ரோடு குண்டும், குழியுமாக இருந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்த பக்தர்கள் வாகனத்தில் இந்த ரோடு வழியாக செல்வது வழக்கம். ஆனால் சேதமடைந்த ரோட்டில் பக்தர்கள் அவதிப்பட்டும், டூவீலரில் செல்பவர்கள் இடறி விழுந்து காயம் அடைந்தனர்.
எனவே வரும் பருவ மழைக்குள் இந்த ரோட்டை அகற்றி தரமான புதிய ரோடு அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கு முன் ரூ.27 லட்சத்தில் தார் ரோடு அமைத்தது. ஆனால் பழைய ரோட்டை அகற்றாமல் அதன் மீதே புதிய ரோடு அமைத்ததால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தரமற்ற பணியால் ரோடு முழுமையா அமைத்த நிலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்தும், ரோட்டோரத்தில் சேதமடைந்தும் உள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் ரூ. 27 லட்சத்தை வீணாக்கி உள்ளனர். தரமான ரோடு அமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனர்.
நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சிவா கூறுகையில், புதிய தார் ரோடு அமைத்த 10 நாட்களில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.
சேதமடைந்த ரோடு சீரமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தரமின்றி அமைத்ததால் மழை காலத்தில் முழுதும் சேதமடையும் அபாயம் உள்ளது.
பெயர்ந்து கிடக்கும் ரோட்டை மீண்டும் தரமாக சீரமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என்றார்.