ADDED : ஜூலை 25, 2024 11:51 PM

தொண்டி: தொண்டி அருகே காரங்காடு செங்கோல் மாதா சர்ச் திருவிழா நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.1ல் தேர் பவனி நடைபெறும். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.