/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் ராமேஸ்வரம் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ADDED : ஜூலை 21, 2024 04:42 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று மதியம் 3:40 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வந்தார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜை, மகா தீபாராதனையில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நீதிபதிக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். இதன் பின் கோயில் மூன்றாம் பிரகாரம் மற்றும் கட்டடக் கலைகளை கண்டு ரசித்தார். மாலை 5:00 மணிக்கு காரில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.