ADDED : ஜூன் 01, 2024 04:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அளிக்கப்பட்டது. 15 நாட்கள் நடந்த பயிற்சியில் 53 மாணவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியை கலை இளமணி எல்.ஆகாஷ் வழங்கினார். பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் சான்றிதழ்கள் வழங்கினார்.