/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின்கம்பிகளில் உரசும் மரக்கிளையால் அபாயம் மின்கம்பிகளில் உரசும் மரக்கிளையால் அபாயம்
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளையால் அபாயம்
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளையால் அபாயம்
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளையால் அபாயம்
ADDED : ஜூன் 01, 2024 04:28 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகர் சிவன் கோயில், கிழக்கு, வடக்கு தெரு, தினமலர் நகர் ஆகிய இடங்களில் மின்வினியோகம் செய்யப்படும் மின்கம்பிகளை உரசும்படியாக மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இவை பலத்த காற்று, மழையின் போது மின் கம்பிகளை உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது.
சில இடங்களில் ஸ்பார்க் ஆகி தீப்பொறி உண்டாகி விபத்து அபாயம் உள்ளது. எனவே நகரில் மின்கம்பிகளை உரசும்படியாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.