/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூன் 22, 2024 05:06 AM
ராமநாதபுரம்,: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை ஜூலை 5 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க., முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதை ரத்து செய்ய சி.பி.சி.ஐ.டி., உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதில் ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ராஜா முகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
விசாரணை நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 5 பேரும் ஆஜர் ஆகினர். கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் ஜூலை 5க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.