ADDED : ஜூன் 22, 2024 05:06 AM
ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே அஞ்சாமடை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
மூலவர் முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்கள் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உதிரமுடைய அம்மன், அன்ன முடைய அய்யனாருக்கு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவில் ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.