/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எஸ்.கீரந்தை பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா எஸ்.கீரந்தை பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
எஸ்.கீரந்தை பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
எஸ்.கீரந்தை பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
எஸ்.கீரந்தை பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED : ஜூன் 19, 2024 06:06 AM

சாயல்குடி, : சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் பழமை வாய்ந்த பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
கோயிலில் ஆண்டு புரவி எடுப்பு விழா மற்றும் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது.
ஜூன் 11 அதிகாலை பக்தர்கள் கடலுக்குச் சென்று புனித நீராடி காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் பூங்குழலி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைநடந்தது.
நேற்று மாலை புரவி எடுப்பு விழாவில் பெரிய உருவம் கொண்ட குதிரை பொம்மைகள், தவழும் பிள்ளைகள், பைரவர் உள்ளிட்ட உருவங்களை நேர்த்திக்கடன் பக்தர்கள் தலையில் சுமந்தவாறு சாயல்குடி நகரில் வலம் வந்தனர்.
கரகாட்டம், மேள தாளங்கள் முழங்க சென்றது. பூங்குழலி அம்மன் கோயிலில் பக்தர்கள் தான் கொண்டு வந்த உருவங்களை வரிசையாக நிறுத்தினர். சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
சுற்றுவட்டார கிராமங்களில் விளைந்த நெல், சிறு குறு தானியங்கள், மிளகாய் கோயில் வளாகத்தில் நேர்த்திக்கடனாக வழங்கினர்.