/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாலைத்தெருவில் தொடரும் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி சாலைத்தெருவில் தொடரும் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
சாலைத்தெருவில் தொடரும் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
சாலைத்தெருவில் தொடரும் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
சாலைத்தெருவில் தொடரும் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 19, 2024 06:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் சாலைத்தெருவில் உள்ள மீன்மார்க்கெட்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள், தள்ளுவண்டிகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.
ராமநாதபுரம் சாலைத்தெருவில் மீன் மார்க்கெட், வணிகநிறுவனங்கள், அரசு அலுவகங்கள் செயல்படுகின்றன. தினமும்நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இப்பகுதியில் சாலையோரம் கயிறு கட்டி அதற்குள் பலர் வியாபாரம்செய்கின்றனர்.
இந்நிலையில் அதனை மீறி ரோடுவரைதள்ளுவண்டியை நிறுத்துகின்றனர். மேலும் டூவீலர்களைகண்டபடி நிறுத்துவதால் காலை, மாலை அலுவலகம்துவங்கும், முடியும் நேரங்களில் சாலைத்தெருவில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.
எனவே ரோடுஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.