ADDED : மார் 14, 2025 07:09 AM
சிக்கல்: சிக்கல் கிழக்கு கடற்கரை் சாலையின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தகர கூரையில் பயணியர் நிழற்குடை உள்ளது. 2011 ல் கடலாடி யூனியன் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது.
ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் வடக்கு பகுதி பயணியர் நிழற்குடையிலும்,
சாயல்குடி, திருநெல்வேலி, திருச்செந்துார், துாத்துக்குடி பஸ்கள் தெற்கு பகுதியில் உள்ள சேதமடைந்த பயணியர் நிழற்குடையிலும் நிறுத்தப்படுகின்றன. நிழற்குடையின் இரு புறங்களிலும் சேதம் அடைந்தும், ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.