/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி
தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி
தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி
தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி
ADDED : மார் 14, 2025 07:09 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மூன்று நாட்களில் பெய்த தொடர் மழையால் தண்ணீர் ரோட்டோரங்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.
மழை நீருடன் கழிநீர் கலந்து ஒன்றாக தெருக்களில் தாழ்வான பகுதியில் தேங்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது:
பகல் மற்றும் இரவு நேரங்களில் கீழக்கரை நகர் பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி வாறுகாலில் மழை நீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பகலிலும் இரவிலும் கடிக்கிறது.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தேங்கிய இடங்களில் கொசு மருந்து மற்றும் கொசு ஒழிப்பு புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
--