/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி-பிளாக்கில் சாக்கடை அடைப்புகழிவு நீரால் சந்தையில் துர்நாற்றம் வியாபாரிகள் பாதிப்பு டி-பிளாக்கில் சாக்கடை அடைப்புகழிவு நீரால் சந்தையில் துர்நாற்றம் வியாபாரிகள் பாதிப்பு
டி-பிளாக்கில் சாக்கடை அடைப்புகழிவு நீரால் சந்தையில் துர்நாற்றம் வியாபாரிகள் பாதிப்பு
டி-பிளாக்கில் சாக்கடை அடைப்புகழிவு நீரால் சந்தையில் துர்நாற்றம் வியாபாரிகள் பாதிப்பு
டி-பிளாக்கில் சாக்கடை அடைப்புகழிவு நீரால் சந்தையில் துர்நாற்றம் வியாபாரிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 01, 2024 04:12 AM

பட்டணம்காத்தான்: ராமநாதபுரம் அருகே பாரதிநகர் டி-பிளாக் மெயின் ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளதால் வாரச்சந்தை வியாபாரிகள், மக்கள்துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக்கில் அம்மாபூங்கா அருகே காலி இடத்தில் புதன் தோறும்வாரச்சந்தை நடக்கிறது. காய்கறி, பழங்கள்,மளிகை பொருட்கள்விற்க, வாங்க ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சந்தை அருகேசாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.எனவே கடைகளுக்கு தரை வாடகை வசூலிக்கும் ஊராட்சிநிர்வாகம் சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.
சந்தை நடைபெறும் புதன்கிழமை தோறும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கவேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் வலியுறுத்தினர்.