ADDED : ஜூன் 01, 2024 04:11 AM
கீழக்கரை: ஏர்வாடி தர்கா அருகே எந்த ஆக்கிரமிப்பும் செய்யகூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் அங்கே நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன.
இதுகுறித்து கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்த புகார் அடிப்படையில்ஆக்கிரமிப்பு கடைகள் மே 23ல் முழுவதுமாக அகற்றப்பட்டன. இங்கு 30 சென்ட் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்வாடகைக்கு வைத்துக் கொண்டு நாள் ஒன்றுக்கு ரூ.300 மற்றும் ரூ.500 வீதம் வசூல் செய்து வந்த நிலையில் கலெக்டருக்கு புகார் சென்றது.
இதையடுத்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் தலைமையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் வேலி கற்கள் ஊன்றப்பட்டு கம்பி வேலிகள் அடைக்கப்பட்டன.
யாத்ரீகர்கள் கூறியதாவது:
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் அவ்விடத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். நிழல் தரும் மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும்.