/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு
சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு
சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு
சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு
ADDED : ஜூலை 23, 2024 05:01 AM

பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் படித்த பழைய மாணவர் சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.
இப்பள்ளியில் படித்த சவுராஷ்டிரா பழைய மாணவர்கள் சங்கத்தினர் 6 முதல் பிளஸ்2 வரை அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பள்ளி தாளாளர் ரெங்கன் தலைமை வகித்தார்.
சங்க துணை தலைவர் கல்விக் குழு பொருளாளர் பரசுராமன், நர்சரி பள்ளி தாளாளர் மணிகண்டன், இளநிலைப் பள்ளி தாளாளர் மாருதிராம் முன்னிலை வகித்தனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.
விழாவில் பரிசு பொருட்களை சென்னை தொழிலதிபர் கண்ணன் வழங்கினார். தொடர்ந்து 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 24 பேருக்கு ஸ்கூல் பேக், கேடயம் வழங்கப்பட்டது.
மாணவர் சங்க நிர்வாகிகள் குமரன், சரவணன், தனசேகரன், சுப்பிரமணியன், சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சவுராஷ்டிரா கல்விக் குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சங்க பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.