Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவம் நிறைவு

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவம் நிறைவு

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவம் நிறைவு

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவம் நிறைவு

ADDED : ஜூலை 23, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் பரமஸ்வாமி வடக்கு நோக்கி சேவை சாதித்தபடி உள்ளார்.

இக்கோயிலில் தனியாக வைகுண்ட வாசல் இல்லாமல், பக்தர்கள்வடக்கு நோக்கிய வைகுண்ட வாசல் வழியாகவே ஆண்டு முழுவதும் தரிசிப்பது வழக்கம். மேலும் சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

மதுரை அழகர்கோவிலுக்கு இணையாக அனைத்து விழாக்களும் நடக்கிறது. இதன்படி ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றப்பட்டு தினமும் சுவாமி வீதி உலா வந்தார்.

நேற்று காலை 11:00 மணிக்கு பெருமாள்ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபத்தின் முன் எழுந்தருளி தீர்த்த மூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. 12 வகை நெய்வேத்தியங்கள் பூஜை செய்யப்பட்டது.

மகா தீபாராதனைக்கு பின் மேள தாளம், சங்கு, சேகண்டி, அர்ச்சகர்களின்வேத மந்திரங்கள் முழங்க பாகவதர்கள் பக்தி பாடல்கள், பிரபந்தங்கள் இசைத்தபடி புறப்பாடாகி நகர் வலம் வந்தார். இரவு சன்னதியில் கருடனுக்கு அபிஷேகம் நடந்து கொடியிறக்கப்பட்டது.

ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஷ்டிகள் செய்துஇருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us