/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி நெடுஞ்சாலை பொறியாளர் வீடு அலுவலகத்தில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் பரமக்குடி நெடுஞ்சாலை பொறியாளர் வீடு அலுவலகத்தில் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
பரமக்குடி நெடுஞ்சாலை பொறியாளர் வீடு அலுவலகத்தில் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
பரமக்குடி நெடுஞ்சாலை பொறியாளர் வீடு அலுவலகத்தில் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
பரமக்குடி நெடுஞ்சாலை பொறியாளர் வீடு அலுவலகத்தில் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 02:08 AM
பரமக்குடி:-ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு அலுவலகம் மற்றும் வீட்டில் இரண்டு நாட்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை காட்டு பரமக்குடியில் நபார்டு மற்றும் ஊரக ரோடு பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு வரை நீடித்த இச்சோதனையில் கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு, தற்காலிக பணியாளர் ஹரிஹரன், இளநிலை உதவியாளர் சதீஷ், அலுவலக கண்காணிப்பாளர் அருளானந்தம் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6:50 மணிக்கு சேதுபதிநகரில் உள்ள கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு வீட்டில்சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 2300 கைப்பற்றப்பட்டது.
மேலும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த போலீசார் தொடர்ந்து 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.