Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்ஸ்டாகிராமில் வாலிபரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட தாய்-, மகள் கைது

இன்ஸ்டாகிராமில் வாலிபரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட தாய்-, மகள் கைது

இன்ஸ்டாகிராமில் வாலிபரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட தாய்-, மகள் கைது

இன்ஸ்டாகிராமில் வாலிபரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட தாய்-, மகள் கைது

ADDED : ஜூன் 15, 2024 02:07 AM


Google News
ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் இன்ஸ்டாகிராமில் பல்வேறு கணக்குகள் மூலமாக லாரி டிரைவரான வாலிபரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு மிரட்டிய தாய், மகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கமுதி அருகே அலங்காரப்பட்டினத்தை சேர்ந்தவர் அஜித்குமார் 24. லாரி டிரைவரான இவருக்கும் ராமேஸ்வரம் அருகே சூசையப்பர்பட்டினம் ராமு மகள் திவ்யா 20, என்பவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தனர். இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் திவ்யா இன்ஸ்டாகிராம் கணக்கை அஜித்குமார் பிளாக் செய்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திவ்யா அஜித்குமார் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப் போவதாக மிரட்டினார். அஜித்குமார் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் திவ்யா, அவரது தாய் மஞ்சுளா 42, ஆகிய இருவரையும் விசாரித்தனர்.

பெண்கள் என்பதால் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா மார்பிங் செய்யப்பட்ட அஜித்குமாரின் ஆபாச படங்களை உருவாக்கி தனது அலைபேசி, தாய் மஞ்சுளா அலைபேசி வழியாக 70க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி அதில் அஜித்குமார் அலைபேசி எண்ணுடன் பதிவு செய்தார்.

ஆபாச படங்களால் அவமானமடைந்த அஜித்குமார் சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் செய்தார். போலீசார் திவ்யா, மஞ்சுளாவை கைது செய்துராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரபாகரன் தாய், மகளை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பரமக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us