Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆர்.எஸ். மங்கலம் ஜமாபந்தியில் கிராம கணக்குகள்: கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ். மங்கலம் ஜமாபந்தியில் கிராம கணக்குகள்: கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ். மங்கலம் ஜமாபந்தியில் கிராம கணக்குகள்: கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ். மங்கலம் ஜமாபந்தியில் கிராம கணக்குகள்: கலெக்டர் ஆய்வு

ADDED : ஜூன் 11, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில், நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கிராம கணக்குகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

கிராம கணக்குகளில் அடங்கல், சாகுபடி விபரம், பட்டா மாறுதல், வறட்சி நிவாரணம், தண்ணீர் தீர்வை, நத்தம் கணக்கு வகைகள், கண்மாய்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகள் தணிக்கை செய்யப்பட்டன. பின்பு, பொதுமக்களிடமிருந்து கணினி திருத்தம், பட்டா மாறுதல், கண்மாய் பராமரிப்பு பணி என 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். புள்ளியல் துறை துணை இயக்குனர் ஜெய்சங்கர், உதவி இயக்குனர் கணேசன், தாசில்தார் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

* பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரி செல்வி தலைமை வகித்தார். பரமக்குடி தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். பார்த்திபனுார் கிராமத்திற்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். மேலும் பரமக்குடி, மஞ்சூர், நயினார்கோவில், கிளியூர், போகலூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் வரும் நாட்களில் பங்கேற்க உள்ளனர்.

* முதுகுளத்துார்: தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமை வகித்தார். தாசில்தார் சடையாண்டி முன்னிலை வகித்தார்.வி.ஏ.ஓ., சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஜமாபந்தியில் முதுகுளத்தூர் வடக்கு பிர்காவிற்க்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை,பட்டா மாறுதல் உட்பட 48 க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர்.

* கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தனலெட்சுமி தலைமை வகித்தார். தாசில்தார் சேதுராமன் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் அபிராமம் பிர்காவிற்க்குட்பட்ட கிராமமக்கள் பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை ஒப்படைப்பு, நில அளவை ,முதியோர் உதவி தொகை உட்பட 55 மனுக்கள் அளித்தனர். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமலோர்பவ ஜெயராணி உட்பட ஆர்.ஐ.,வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர், அலுவலக பணியாளர்கள் பலரும் இருந்தனர்.

* திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. நேற்று முதல் கட்டமாக மங்களக்குடி பிர்கா கணக்குகள் ஆய்வு செய்யபட்டது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக புகார் மனுக்களை கொடுத்தனர். தாசில்தார் கார்த்திகேயன், அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us