/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெருமாள்தேவன்பட்டியில் ரோடு சேதம்: விபத்து அபாயம் பெருமாள்தேவன்பட்டியில் ரோடு சேதம்: விபத்து அபாயம்
பெருமாள்தேவன்பட்டியில் ரோடு சேதம்: விபத்து அபாயம்
பெருமாள்தேவன்பட்டியில் ரோடு சேதம்: விபத்து அபாயம்
பெருமாள்தேவன்பட்டியில் ரோடு சேதம்: விபத்து அபாயம்
ADDED : ஜூன் 18, 2024 05:46 AM

கமுதி : கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியில் மூலக்கரைப்பட்டி, வடுகப்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி, மூலக்கரைப்பட்டி, வடுகப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பெருமாள் தேவன்பட்டியிலிருந்து மூலக்கரைப்பட்டி, வடுகப்பட்டி செல்லும் ரோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது மூலக்கரைப்பட்டியில் ரோட்டோரத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டோரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.