/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புது பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
புது பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
புது பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
புது பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 18, 2024 05:44 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக சின்னக்கடை வீதிக்கு செல்லும் ரோடு பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம், உழவர்சந்தை, நகராட்சி பள்ளிகளும் உள்ளன. சின்னக்கடை பகுதிக்கு இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு தொடர் பராமரிப்பில்லாமல் கற்கள் பெயர்ந்தும், பல இடங்களில் குழியாகியுள்ளது.
இதனால் இரவு நேரத்தில் விபத்துக்களும் நடக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.