/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பாய்ந்தோடும் பஸ்களால் விபத்து அபாயம் குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பாய்ந்தோடும் பஸ்களால் விபத்து அபாயம்
குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பாய்ந்தோடும் பஸ்களால் விபத்து அபாயம்
குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பாய்ந்தோடும் பஸ்களால் விபத்து அபாயம்
குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பாய்ந்தோடும் பஸ்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 20, 2024 04:35 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பகுதி ஈசா பள்ளிவாசல் தெருவில் குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளங்களில் பஸ்கள் பாய்ந்தோடி வருவதால் விபத்து அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலிருந்து தான் புறநகர் பகுதிகளான பெரியபட்டினம், உத்தரகோசமங்கை, நல்லிருக்கை, தேரிருவேலி, கீழக்கரை, திருப்புல்லாணி உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி தினமும் குறைந்த பட்சம் 200 முறை இந்த ரோடுகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
யானைக்கல் தெரு பகுதியில் இருந்து ஈசா பள்ளிவாசல் தெரு வரையிலான ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
முருகேஸ்வரி: ஈசா பள்ளிவாசல் தெருவில் உள்ள ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது. முறையான பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்யாததால் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.
இதில் வாகனங்கள் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
பஞ்சவர்ணம்: நாங்கள் இந்த பகுதியில் தான் குடியிருந்து வருகிறோம். அனைத்து டவுன் பஸ்களும் இந்தப்பகுதியில் இருந்து தான் இயக்கப்படுகின்றன. அனைத்தும் ஓட்டை, உடைசல் பஸ்களாக உள்ளன.
இங்குள்ள மெகா பள்ளங்களில் இந்த பஸ்கள் வரும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் செல்லும் நிலை உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வடிவேல்: இந்த பகுதியில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் நெருக்கடியான வீதிகளில் இயக்கப்படுகிறது.
இங்குள்ள பள்ளங்களில் பஸ்கள் நீந்தி வருவது போல் தான் வருகின்றன. ஏற்கனவே அரசு பஸ்கள் கட்டுப்பாடற்ற நிலையில் டிரைவர்கள் இயக்கி வருகின்றனர்.
இந்தப்பகுதியில் பெரிய விபத்துக்கள் நடப்பதற்கு முன் குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
ரோடு சீரமைப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.