/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரியமான் கடற்கரையில் அதிகளவு ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: சுற்றுலாப் பயணிகளே உஷார் அரியமான் கடற்கரையில் அதிகளவு ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: சுற்றுலாப் பயணிகளே உஷார்
அரியமான் கடற்கரையில் அதிகளவு ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: சுற்றுலாப் பயணிகளே உஷார்
அரியமான் கடற்கரையில் அதிகளவு ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: சுற்றுலாப் பயணிகளே உஷார்
அரியமான் கடற்கரையில் அதிகளவு ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: சுற்றுலாப் பயணிகளே உஷார்
ADDED : ஜூன் 20, 2024 04:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரியமான் கடற்கரையில்அரிய வகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கும் நிலையில் இவற்றைதொட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் உஷராக இருக்க வேண்டும்.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், அழகன்குளம், தொண்டி ஆகிய கடற்கரையில் மீன்கள் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் வலையில் சிக்கியும், கரைப்பகுதியில் உயிருடன் அல்லது இறந்த நிலையில் அரியவகை மீன்கள் ஒதுங்குகின்றன.
அந்த வரிசையில் விஷத்தன்மை மிக்க மீனாக கருதப்படும் ஜெல்லி மீன்கள் ராமநாதபுரம் அருகே அழகன்குளம், அரியமான் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிள்ளன. கடற்கரை திருவிழாவின் போது கடலில் குளித்த சிலர் ஜெல்லி மீன்களால்பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவகால மாற்றத்தின் போது அரிய வகை ஜெல்லி மீன்கள்கடற்கரையில் ஒதுங்குகின்றன. இவற்றை தொட்டால் உடலில் அரிப்பு ஏற்படும்.
எனவே அரியமான் கடற்கரைக்கு விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலாப் பயணிகள், மக்கள் உஷராக இருக்க வேண்டும். மேலும் அரிய கடல்வாழ் உயிரினம் என்பதால் பாதுகாக்கவலியுறுத்துகிறோம். அதே சமயம் கடல் ஆமைகள் ஜெல்லி மீன்களை பிடித்து உண்பதால் அவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றனர்.