/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி பாரதி நகர், வசந்தபுரம் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு ; பூங்கா, நடைமேடை அமைக்க கோரிக்கை பரமக்குடி பாரதி நகர், வசந்தபுரம் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு ; பூங்கா, நடைமேடை அமைக்க கோரிக்கை
பரமக்குடி பாரதி நகர், வசந்தபுரம் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு ; பூங்கா, நடைமேடை அமைக்க கோரிக்கை
பரமக்குடி பாரதி நகர், வசந்தபுரம் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு ; பூங்கா, நடைமேடை அமைக்க கோரிக்கை
பரமக்குடி பாரதி நகர், வசந்தபுரம் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு ; பூங்கா, நடைமேடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2024 11:08 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பாரதி நகர், வசந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை ரோடுகள் ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் சீரமைத்து பூங்கா மற்றும் நடைமேடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை-- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பரமக்குடி வழியாக செல்கிறது. நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் பரமக்குடி வழியாக செல்லும் நிலை உள்ளது.
பரமக்குடி ஓட்டப்பாலம் துவங்கி ஐந்து முனை ரோடு வரை நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பாரதி நகர், வசந்தபுரம் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிளில் நெடுஞ்சாலையில் இருந்து இரு புறங்களிலும் இரு வழி சாலை அமைக்கும் அளவிற்கு இடம் உள்ளது.
ஏராளமான நிழல் தரும் மரங்கள் இப்பகுதியில் இருக்கிறது. மேலும் ரோட்டில் இருந்து இருபுறங்களிலும் ஐந்து அடிக்கும் மேல் பாதசாரிகள் நடக்கும் வகையில் பேவர்பிளாக் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வீடுகளை ஒட்டி மழை நீர் வழிந்தோடும் வகையில் பெரிய வாறுகால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ரோடு மற்றும் வாறுகாலுக்கு இடையில் உள்ள இடத்தில் ஹோட்டல்கள், லாரி, கார், வேன் நிறுத்துமிடமாகவும் மற்றும் நிரந்தரமாக கடைகளை அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கலெக்டர்கள் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்கும் திட்டம் வைத்திருந்தனர். ஆனால் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் ஆக்கிரமிப்பு பெருகி ரோட்டோரங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே வரும் நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.