/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நம்பர் பிளேட்டில் டிசைன் எழுத்துக்கள் வாகனங்கள் மீது நடவடிக்கை அவசியம் நம்பர் பிளேட்டில் டிசைன் எழுத்துக்கள் வாகனங்கள் மீது நடவடிக்கை அவசியம்
நம்பர் பிளேட்டில் டிசைன் எழுத்துக்கள் வாகனங்கள் மீது நடவடிக்கை அவசியம்
நம்பர் பிளேட்டில் டிசைன் எழுத்துக்கள் வாகனங்கள் மீது நடவடிக்கை அவசியம்
நம்பர் பிளேட்டில் டிசைன் எழுத்துக்கள் வாகனங்கள் மீது நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூன் 25, 2024 11:08 PM
ஆர்.எஸ்.மங்கலம் : வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் டிசைன் வடிவ எழுத்துக்களால் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க போலீசார் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
டூவீலர் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்கள் பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் இருக்க வேண்டும். நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்ணைத் தவிர பெயர்களோ, கட்சி சின்னங்களோ இடம் பெறக்கூடாது என அரசு தொடர்ந்து சட்டங்கள் இயற்றி வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்கள் தெளிவாக தெரியாத வகையில் டிசைன் எழுத்துக்களாகவும், நம்பர் பிளேட்டுகளில் தங்களது பெயர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் படங்கள் உள்ளிட்டவைகளுடனும் ஏராளமான வாகனங்கள் சுற்றி வருகின்றன.
இதனால் சாலை விபத்து மற்றும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவு எண்களை பொதுமக்கள் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பும் சூழல் உள்ளது.
எனவே போலீசார் வாகன நம்பர் பிளேட்டுகளில் உள்ள டிசைன் பதிவு எண்கள் மற்றும் அரசியல் சின்னங்கள், பெயர்கள் உள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.