நீராவி கரிசல்குளம் ரோடு சீரமைப்பு
நீராவி கரிசல்குளம் ரோடு சீரமைப்பு
நீராவி கரிசல்குளம் ரோடு சீரமைப்பு
ADDED : ஜூன் 07, 2024 11:00 PM
கமுதி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதியில் இருந்து கிளாமரம் வழியாக நீராவி கரிசல்குளம் 14 கி.மீ., உள்ளது.
இதனால் காவடிப்பட்டியில் இருந்து சின்ன கரிசல்குளம் வழியாக நீராவி கரிசல்குளத்துக்கு 7 கி.மீ ரோட்டை கிராம மக்கள் பயன்படுத்தினர்.
ரோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. அப்போது நீராவி கரிசல்குளத்திற்கு செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
இவ்வழியே டூவீலர், வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மேலராமநதி ஊராட்சி சார்பில் நீராவி கரிசல்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு செம்மண்ணால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.